முழு நிலா

அவளுக்கும் நிலவுக்குமிடையான
நீண்ட நேர உரையாடல்களுக்காக
அதன் முழுமைக்காக அவள் காத்திருப்பாள்..
அந்த நிலவிடம் கொட்டித்தீர்க்க
கட்டியழ அவளிடம் ஓராயிரம் விடயங்கள் கொட்டிக்கிடக்கும்..
அவளின் காதல் முதல் மோதல் வரை
அந்த நிலவிடம் கூறி விடை கோருவாள்..
பதில் கேட்பாள்…
நிலவின் மௌனத்தை தனக்கேற்றவாறு மொழிபெயர்பாள்..
அந்த உரையாடல்கள் சில சமயம் விடிகாலை வரை நீள்வதும் உண்டு.
கண்ணீராய் கரைவாள் கண்டு தாளாது முகிலிடை முகம் மறைக்கும் அந்த நிலா..
அவள் கண்ணீரை துடைக்க தென்றலை தூதனுப்பும்..
அங்கு வேஷமில்லை களவு இல்லை
பொய்களில்லை…
அந்த அன்புக்கும் எல்லையில்லை…
இது புனிதமானது தான்..

Spread the love!
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Thuva aki

Related post